சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கழக வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் விண்ணப்பம் பெறுவதற்கான தேதி விவரங்களை திமுக தலைமை அறிவித்து உள்ளது.

மக்களவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், திமுக தலைமை கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மற்றொருபுறம் தேர்தல் பிரசார பணிகளை தொடங்குவதுடன், தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகளையும் முடுக்கி விட்டுள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனு பெற்றுக்கொள்ளலாம் என திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினர் வரும் 19ஆம் தேதியில் இருந்து திமுக தலைமையிடத்திற்கு விருப்ப மனு பெற்றுக்கொள்ளலாம் என திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனுக்களை பெற்று போட்டியிடும் தொகுதி, முழு விபரங்களை நிரப்பி மார்ச் 1 முதல் மார்ச் 7ஆம் தேதிக்குள் திரும்ப அளிக்க வேண்டும்.

பொது தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்டணமாக ரூ.50000 செலுத்த வேண்டும்.

தனி தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் ரூ.20000 கட்டணம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.