ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான 43 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாவது பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது.

ராஜஸ்தான், குஜராத், உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோயின் மகன் கவுரவ் கோகோய் ஜோர்ஹாட் தொகுதியில் போட்டியிடுகிறார்.

மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா தொகுதியில் கமல்நாத்தின் மகன் நகுல்நாத் போட்டியிடுகிறார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜாலோர் தொகுதியில் முன்னாள் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் களமிறக்கப்பட்டுள்ளார்.

சச்சின் பைலட்டின் பெயர் இந்த பட்டியலில் இடம்பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் இரண்டாவது பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை.

பாரதிய ஜனதா கட்சியால் டிக்கெட் மறுக்கப்பட்ட ராகுல் கஸ்வான், ராஜஸ்தான் மாநிலம் சுரு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார்.