டெல்லி’

ந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை இந்தியாவில் ரூ. 223 லட்சம் கோடிக்கு பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன.

ஸ்மார்ட்போன் பயனாளர்கள் மத்தியில் யு பி ஐ என்று அழைக்கப்படும் ‘ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம்’, மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த வசதி 2016ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு கூகுள் பே. பேடிஎம் போன்ற செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

2024 ஜனவரி முதல் நவம்பர் 2024 வரை இந்தியாவில் யுபிஐ மூலம் 15,547 கோடி பரிவர்த்தனை நடந்து சாதனை படைத்துள்ளது. தேசிய பணப்பரிவர்த்தனை நிறுவனம் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்பிசிஐ) வெளியிட்ட தரவுகளின்படி, 2024 ஜனவரி முதல் நவம்பர் மாதத்தில் 15,547 கோடி பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு டிஜிட்டல் பரிவர்த்தனை வசதி (ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை வசதி – யுபிஐ), தொடங்கப்பட்டதிலிருந்து 2024 ஜனவரி முதல் நவம்பர்  வரை. ரூ.223 லட்சம் கோடி மதிப்பிலான பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.