2024 ஐசிசி டி20 மகளிர் உகக்கோப்பை போட்டிகள் வங்கதேசத்தில் இருந்து ஐக்கிய அரபு நாடுகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் ஆட்சிமாற்றத்தை தொடர்ந்து எழுந்துள்ள வன்முறை ஒயாததை அடுத்து ஐசிசி இந்த முடிவை எடுத்துள்ளது.
இதுகுறித்து ஐசிசி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ஐசிசி டி20 மகளிர் உகக்கோப்பை போட்டிகளை வங்கதேசத்தில் நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.
ஆனால், போட்டியில் பங்கேற்கும் பல நாடுகள் வங்கதேசத்தில் நடைபெற்று வரும் வன்முறை காரணமாக பயண தடைகளை விதித்துள்ளது.
இதனால் போட்டியை வேறு நாடுகளில் நடத்த முயற்சிகள் எடுக்கப்பட்டது. இலங்கை மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் தங்கள் நாடுகளில் நடத்த ஒத்துழைப்பு வழங்கியது.
இருந்தபோதும் 2024 ஐசிசி டி20 மகளிர் உகக்கோப்பை போட்டிகளை ஐக்கிய அரபு நாடுகளில் நடத்த ஐசிசி முடிவெடுத்துள்ளது.
அக்டோபர் 3 முதல் 20 வரை நடைபெற உள்ள இந்த போட்டிகள் துபாய் மற்றும் ஷார்ஜா ஆகிய இடங்களில் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.