அமைதிக்கான நோபல் பரிசு ஈரானில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு எதிராக போராடி வரும் நர்கீஸ் மொஹம்மதி-க்கு வழங்கப்பட்டுள்ளது.
ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கீஸ் மொஹம்மதி பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் மனித உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
அதற்காக 13 முறை கைது செய்யப்பட்டுள்ள நர்கீஸ் 5 முறை தண்டனைக்கு உள்ளாகி இருப்பதோடு 154 கசையடிகளையும் வாங்கியுள்ளார். இதுவரை மொத்தம் 31 ஆண்டுகள் சிறையில் கழித்துள்ள இவர் தற்போதும் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்வீடனைச் சேர்ந்த ஆய்வாளர் ஆல்ப்ரெட் நோபல் நினைவாக வழங்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு இந்த ஆண்டு நர்கீஸ் மொஹம்மதி-க்கு வழங்கப்படும் என்று நார்வே அறிவித்துள்ளது.