ஸ்ரீஹரிகோட்டா: நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பியுள்ள சந்திரயான்3 விண்கலம், நிலவை நெருங்கி சென்று கொண்டி ருக்கிறது. அதன் சுற்றுவட்டப்பாதை ஏற்கனவே 3 சுற்று உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது 4வது சுற்றுக்கு உயர்த்ததும் பணி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது என்று இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
சந்திரயான் 3 விண்கலத்தின் 4வது சுற்றுப்பாதையை உயர்த்தும் பணி வெற்றிகரமாக நிறுத்தப்பட்டது எனவும், நிலவை சந்திரயான்-3 விண்கலம் நெருங்கி வருகிறது எனவும், இஸ்ரோ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 14-ம் தேதி (ஜுலை) பிற்பகல் நிலவு தொடர்பான ஆய்வுக்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து அரதன் சுற்றுவட்டப்பாதையில் நிறுத்தும் பணி வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஜூலை 17ம் தேதியன்று 2வது சுற்றுப்பாதைக்கு சந்திரயான்-3 விண்கலத்தை உயர்த்தும் முயற்சி வெற்றி பெற்றது. தொடர்ந்து கடந்த 18ம் தேதி 3வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் முயற்சி வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து நேற்று (ஜூலை 20ந்தேதி) 4வது சுற்சு வட்டப்பாதைக்கு உயர்த்தும் பணி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, இஸ்ரோ வெளியிட்ட அறிக்கையில், சந்திரயான் 3 விண்கலத்தின் 4வது சுற்றுப்பாதையை உயர்த்தும் பணி வெற்றிகரமாக நேற்று மாலை நிறுத்தப்பட்டது. பெங்களூருவில் உள்ள தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சந்திரயான்-3 தொடர்ந்து கண்காணிக்கபட்டு வருகிறது.
2023 சந்திரயான்-3 🛰️ நிலவுக்கு ஒரு படி அருகில் செலுத்துவதன் மூலம் 🌖 நான்காவது சுற்றுப்பாதையை உயர்த்தும் சூழ்ச்சி (பூமிக்கு செல்லும் பெரிஜி கன் சாட் ) பெங்களூரு ISTRAC/ISRO இலிருந்து வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. அடுத்த ஜூலை 25, 2023 அன்று மதியம் 2 மணி முதல் 3 மணி வரை இந்திய அளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.