டெல்லி: நவம்பர் 8ந்தேதி முழு சந்திர கிரகணம் நடைபெறுகிறது. இதை பொதுமக்கள் வெறும் கண்ணால் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சந்திரனும் சூரியனும் பூமியில் இருந்து நேர் கோட்டில், எதிரெதிர் பக்கங்களில் இருக்கும்போது முழு சந்திர கிரகணம் (total lunar eclipse) நிகழும். பூமியின் நிழலின் ஒரு பகுதி மட்டுமே சந்திரனை மறைக்கும் போது பகுதி சந்திர கிரகணம் (partial lunar eclipse) நிகழ்கிறது. சந்திரகிரகணத்தை காண தொலைநோக்கி போன்ற கருவிகளோ, கண்களை காத்து கொள்ள தனிப்பட்ட கவனமோ தேவையில்லை.

ஏற்கனவே கடந்த மே மாதம் சந்திர கிரகணம் ஏற்பட்டது. தொடர்ந்து சமீபத்தில் பகுதி நேர சூரிய கிரகணம் நடைபெற்ற நிலையில்,  நவம்பர் மாதம் 8ஆ தேதி முழு சந்திர கிரகணம் நிகழவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

2022 ஆம் ஆண்டின் இரண்டாவது முழு சந்திர கிரகணம், ஆசியா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, வடக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் சில பகுதிகள் மற்றும் தென் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து தெரியும் என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக , தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ரும் நவம்பர் 8ஆம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழவுள்ளதாகவும், இந்திய நேரப்படி 2.39 மணிக்கு தொடங்கி 6.19 மணிக்கு முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 5.38 மணிக்கு தான் உதயமாகும் எனவும் கூறப்பட்டுள்ளது. சந்திரகிரகணத்தை காண தொலைநோக்கி போன்ற கருவிகளோ, கண்களை காத்து கொள்ள தனிப்பட்ட கவனமோ தேவையில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, மீண்டும்2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ஆம் தேதி தான் சந்திர கிரகணத்தை காணலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.