சுவிட்சர்லாந்து

இந்த ஆண்டுக்கான வேதியல் துறை நோபல் பரிசு ஜெர்மனியின் பெஞ்சமின் லிஸ்ட் மற்ரும் அமெரிக்காவின் டேவிட் மேக்மில்லன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு துறையிலும் சாதனைகள் புரிந்தோருக்கு உலகின் மிகப் பெரிய பரிசான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.  அவ்வகையில் இன்று வேதியல் துறைக்கான பரிசை வென்றோர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.   இந்த பரிசை இரு விஞ்ஞானிகள் பகிர்ந்து கொள்கின்றனர்.

இந்த 2021 ஆம் ஆண்டு வேத்தியலுக்கான நோபல் பரிசு இரு விஞ்ஞானிகளுக்கு இத்துறையில் சிறந்த ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்டுள்ளது.  அவர்கள் ஜெர்மனியைச் சேர்ந்த பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் டேவிட் மேக்மில்லன் ஆகியோர் ஆவார்கள்.

இவர்களுக்கு அசிம்மெட்ரிக் ஆர்கனோகெடலிசிஸ் (ASYMMEDTRIC ORANOCATALYST) என்னும் புதிய வினையூக்கியை கண்டறிந்ததற்காக இந்தாண்டுக்கான நோபல் பரிசு அளிக்கப்படுகிறது.