சென்னை:
தமிழக சட்டமன்றத்தின் புத்தாண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், வரும் 9ந்தேதி வரை, அதாவது மொத்தமே 4 நாட்கள் மட்டுமே கூட்டம் நடைபெறும் என்று சட்டமன்ற அலுவல் ஆய்வு குழுவில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
சட்டம்ன்ற கூட்த்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து சபாநாயகர் தலைமையில் அனைத்துக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பங்குபெறும் அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.
இந்த நிலையில், இன்று 2020ம் ஆண்டில், தமிழக சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் கவர்னர் உரையுடன் இன்று தொடங்கியது. கவர்னர் உரை முடிவடைந்ததும், அந்த வகையில், 2020-ம் ஆண்டின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது. காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் இன்றைய முதல் நாள் கூட்டம் நிறைவு பெற்றது.
அதைத்தொடர்ந்து, சபாநாயகர் தனபால் தலைமையில் சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், சட்டமன்ற கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது?, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அலுவல் ஆய்வுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டது.
அதன்படி, தமிழக சட்டமன்றத்தின் இந்த முதல் கூட்டத் தொடரை வரும் 9-ம் தேதி (வியாழக்கிழமை) வரை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முதல் கூட்டத்தொடர் மொத்தமே 4 நாட்கள்தான் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.