டில்லி:

டைபெற உள்ள  நாடாளுமன்ற தேர்தலையொட்டி,  193 புதிய தேர்தல் சின்னங்களை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது.

17வது மக்களவைக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், நாடு முழுவதும் ஏராளமான அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம் புதிதாக  இதுவரை 2301 கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

இதன் காரணமாக, தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்குவதில் சிரம ஏற்பட்டதால், புதியதாக 198 சின்னங்களையும் உருவாக்கியுள்ளது.

புதிய சின்னங்கள் விவரம்:

ஹெலிகாப்டர், சிசிடிவி கேமரா, கம்ப்யூட்டர், கம்ப்யூட்டர் மவுஸ், கதவு கைப்பிடி, காதணி, கால்பந்து, இஞ்சி, பிஸ்கட், பலாப்பழம், பாத்திரம் கழுவும் தொட்டி, பென் டிரைவ், ரோபோட், ரப்பர் ஸ்டாம்ப், கப்பல், சிதார், ஷட்டர், சோபா, ஸ்பேனர், ஸ்டம்ப், ஸ்விட்ச் போர்டு, டியூப்லைட், வாட்டர் டேங்க் உள்ளிட்ட 198 சின்னங்கள் புதிதாக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.