இந்திய நாட்டுக்கு ‘ சனி ‘ பிடித்தது 2016… நவம்பர் 8 ஆம் தேதி… நள்ளிரவு..
அப்போதுதான் நமது’ 56 இன்ச் ‘ பிரதமர் நரேந்திர மோடி ” பணமதிப்பிழப்பு” என்னும் நாடகத்தை அரங்கேற்றினார்!
அவர் , நாட்டிலுள்ள 4 லட்சம் கோடி கறுப்புப் பணம் சிக்கும் என்று கணக்கிட்டார்!
ஆனால், மொத்தப் பணமும் ‘ கணக்கில் வந்த பணமானது’ மோடிக்கும் பெரும் பின்னடைவைத் தந்தது!
ஆனால், அதன் பின்னர் தான் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து… நாட்டின் வளர்ச்சி விகிதம் பாதாளத்துக்குச் சென்றது!
சிறு குறு தொழில்கள் அழிக்கப்பட்டன… வேலையின்மை அதிகரித்தது! மேலும் மோடி அரசு ‘ ஜி. எஸ். டி. வரி ‘ கொண்டு வந்து மக்கள் தலையில் இடையே இறக்கியது!
மேலும், கார்ப்பொரேட்டுகளுக்கு ஆதரவான வேளாண் திருத்தச் சட்டங்கள் விவசாயிகளின் வயிற்றில் அடித்தன!
இன்னும் சாமானியர்கள் பயன்படுத்தும் சமையல் காஸ், பெட்ரோல், டீசல் விலைகள் விண்ணில்…!
ஆக, மோடியின் ** நவம்பர் 8 என்பது, சாமானிய மக்களுக்கு “ஏழரை” யில் முடிந்து விட்டது பெரும் சோகம்!!
—- ஓவியர் பாரி