ரிஷப: ராசி

rishabam

இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு சுகஸ்தானத்தில் குரு, சந்திரன் இணைந்து கெஜகேசரி யோகத்தை தந்திருப்பதால், தடைபட்ட கட்டட வேலை வேகமாக கட்டி முடிக்கப்படும். வாகனம் விருத்தி உண்டு, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு அமையும்.

6-ஆம் இடத்தில் செவ்வாய் இருப்பதால், நீண்ட நாட்களாக வாட்டி வதைத்த நோய் நொடி நீங்கும். விரோதியும் அடி பணிவான். அஷ்டமஸ்தானத்தில் சூரியன் உள்ளதால், குடும்பத்தில் சற்று சிறு,சிறு பிரச்னைகள் எழலாம். ஆனாலும் பெரிய பாதிப்பு வராது.

பஞ்சமஸ்தானத்தில் இராகு அமையப்பெற்றுள்ளார். பூர்வீக சொத்தால் லாபம் வரும். சப்தமத்தில் சனி, சுக்கிரன் இருப்பதால், கூட்டு தொழில் லாபம் பெறும். 2016-ஆம் ஆண்டு உங்களுக்கு முருகன் அருளால் முன்னேற்றமான வாழ்க்கையாக அமையும்.

உங்கள் இராசிக்கான பரிகாரம் : முருகப்பெருமானை வணங்குங்கள். ஒரு முறையாவது திருத்தணிக்கு சென்று உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்யுங்கள். செவ்வாய்கிழமையில் முருகனுக்கும், செவ்வாய் பகவானுக்கும் வாசனை மலர்களை சமர்ப்பியுங்கள். முருகப்பெருமானின் ஆசியால் தடை கற்கள் படிகல்லாக மாறி உங்கள் வாழ்க்கையில் ஏற்றம் ஏற்படும்.

ஜோதிடமாமணி லயன் கே. விஷ்வேரன்