2016 புத்தாண்டு பலன்: மீன ராசி அன்பர்களுக்கு

meenam

இந்த 2016-ஆம் ஆண்டில், குரு, சந்திரன் இணைந்து, கெஜகேசரி யோகத்தை தந்திருப்பதால், நீங்கள் கண்ட கனவு பலிக்கும். விட்டது, விலகியது அனைத்தும் கைக்கு வந்தடையும். குடும்பத்தில் சுபகாரியம், திருமண விஷயங்கள் பிரமாதமாக நடைபெறும். பாக்கியஸ்தானத்தில் அமைந்துள்ள சனி, சுக்கிரன், புதிய கட்டடம் கட்டும் யோகத்தை தருவார்கள். பொன், பொருள் வாங்கும் பாக்கியம் கிடைக்கும். வீடு, மனை அமையும். உறவினர் வருகை அதிகரிக்கும். கடன்கள் தீரும். வேலை வாய்ப்பு அமையும். நசிந்த தொழில் நிமிர்ந்து நிற்க உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் யோகம் உண்டு.

லாபஸ்தானத்தில் புதன் அமைந்திருப்பதால், நோய் நொடி நீங்கும். 10-ஆம் இடத்தில் அமைந்துள்ள சூரியன், மனமகிழ்ச்சியை வாரி வழங்குவார். பொதுவாக இந்த ஆண்டு உங்களுக்கு மகிழ்ச்சி பொங்க செய்யும் ஆண்டாக அமையும்.

உங்கள் இராசிக்கான பரிகாரம் : சூரிய பகவானுக்கு ஞாயிற்று கிழமைகளில் சிகப்பு மலர்களை அணிவித்து சூரிய பகவானை வணங்குங்கள். அத்துடன், உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில், சூரிய பகவானுக்கு சிகப்பு நிற வஸ்திரம் அணிவியுங்கள். உங்கள் வாழ்க்கை பிரகாசமாக ஜொலிக்கும்

ஜோதிடமாமணி லயன் கே. விஷ்வேரன்