துலா ராசி

thulam

இந்த 2016-ஆம் ஆண்டில், குரு, சந்திரன் இணைந்து லாபத்தில் உள்ளனர். ஆகவே, இந்த கெஜகேசரி யோகத்தால் முன்னேற்ற பாதைக்கு வழி தெரிந்து விட்டது. இனி யோக காலம்தான். தொழில்துறையில் மாற்றம் உண்டு. உத்தியோகத்தில் இடபெயர்ச்சி ஏற்படுத்தும். திருமணம் நடைபெற சாத்திய கூறு உண்டு.

ஜென்ம இராசியில் செவ்வாய் இருப்பதால், உடல்நலனில் கவனம் தேவை. முன்கோபம் வேண்டாம். ஏழரை சனி உள்ளதால், குடும்பத்தில் சலசலப்பு ஏற்படுத்தும். ஆகவே மௌனம் தேவை. கீர்த்தி ஸ்தானத்தில் சூரியன் அமைந்த காரணத்தால், எடுத்த காரியத்தை போராடி நிறைவேற்றுவீர்கள்.

சுகஸ்தானத்தில் புதன் உள்ளார். கல்வியால் பலன் உண்டு. உறவினர் வருகையால் சிறு பிரச்னை உருவாக்கும். 6-ஆம் இடத்தில் உள்ள கேது பகவான், வழக்கில் சற்று இழுப்பறி தருவார். ஸ்ரீஆஞ்சனேயரின் அருளால் இந்த ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

உங்கள் இராசிக்கான பரிகாரம் : சனிக்கிழமையில் சனிஸ்வர பகவான் சன்னதி சென்று எள் தீபம் ஏற்றுங்கள். காக்கைக்கு எள் சாதத்தை சனிக்கிழமைதோறும் வையுங்கள். ஸ்ரீஆஞ்சனேயர் கோயிலுக்கு சென்று உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய இறைவன் அருள் பரிவான்.

ஜோதிடமாமணி லயன் கே. விஷ்வேரன்