2016 புத்தாண்டு பலன்: தனுசு ராசி அன்பர்களுக்கு

dhanush

இந்த 2016-ஆம் ஆண்டில், குரு, சந்திரன் இணைந்து உங்களுக்கு கெஜகேசரி யோகத்தை தந்திருப்பதால், தடைபட்ட காரியங்கள் இனி தடை இல்லாமல் நடைபெறும். பொன், பொருள் வீடு, மனை அமையும்.

ஜென்ம இராசியில் சூரியன் உள்ளதால் உழைப்பு அதிகமாகும். தனஸ்தானத்தில் புதன் இருக்கிறார். குடும்ப செலவு அதிகமாகும். சுகஸ்தானத்தில் கேது அமைந்ததால், உடல் நலனில் கவனம் தேவை. உங்களுக்கு தற்போது விரய சனி நடைப்பெற்று வருகிறது. ஆகவே, யாரிடமும் வாக்கு வாதம் வேண்டாம்.

லாபஸ்தானத்தில் செவ்வாய் உள்ளார். சோதனை எல்லாம் சாதனையாக மாற வாய்ப்புண்டு. சுபகாரியங்கள் நடைபெறும். 10-ஆம் இடத்தில் இராகு அமைந்து தொழில் துறையில் வளர்ச்சி கிடைக்க காரணமாக இருப்பார். வேலை வாய்ப்பு அமையும். ஆனாலும், கடன் சுமை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். காரணம் இப்போது உங்களுக்கு 7½ சனியில் விரய சனி நடக்கிறது. வம்பு வந்தாலும் ஒதுங்கிக் கொள்ளுங்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. பைரவர் அருளால் லாபமான ஆண்டாக இருக்கும்.

உங்கள் இராசிக்கான பரிகாரம் : பைரவர் சன்னதிக்கு சென்று பைரவரை வணங்குங்கள். பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றுங்கள். கஷ்டத்தை நீக்கி மகிழ்ச்சியானதாகவும், லாபகரமான ஆண்டாகவும் அமைய பைரவர் உங்களுக்கு அருள் புரிவார்.

ஜோதிடமாமணி லயன் கே. விஷ்வேரன்