கன்னி ராசி

kanni

இந்த 2016-ஆம் ஆண்டில்,குரு, சந்திரன் இணைந்து கெஜகேசரி யோகத்தை தந்தனர். முக்கியமாக வெளிநாட்டில் தொழில் தொடர்புகளும், வேலை வாய்ப்பும் தரும் யோகம் இது. ஜென்மத்தில் இராகு உள்ளார். தேவைக்கு அதிகமாக கடன் வாங்காதீர்கள்.

குடும்பஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால், இதுநாள் வரையில் குடும்பத்தில் இருந்த குழப்பம் தீரும். கீர்த்தி ஸ்தானத்தில் சனி, சுக்கிரன் உள்ளனர். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. சுகஸ்தானத்தில் சூரியன் அமைந்ததால், கல்வியில் தடை ஏற்படுத்தச் செய்வார்.

இறைவன் அருளால், குரு பார்வை இருப்பதால் எப்படியும் கல்வியை தொடர்வீர்கள். பஞ்சமஸ்தானத்தில் புதன் இருக்கின்ற காரணத்தால், பூர்வீக சொத்தில் சிறு வாக்கு வாதம் உருவாகி பிறகு சுமுகமாகும். சப்தமஸ்தானத்தில் கேது அமைந்ததால், கூட்டு தொழில் விஷயத்தில் சற்று எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிக்காக கடன் ஏற்படும். சிவபெருமான் அருளால் சிறப்பான ஆண்டாக அமையும்.

உங்கள் இராசிக்கான பரிகாரம் : திங்கட் கிழமையில் ஈஸ்வரன் ஆலயத்திற்கு சென்று வில்வ இலையை சிவலிங்கத்திற்கு அணிவியுங்கள். விநாயகப்பெருமானுக்கு அருகம்புல் அணிவித்து வணங்குங்கள். ஒருவருக்காவது, உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் அன்னதானம் செய்யுங்கள். உங்களை வாட்டி வதக்கும் கஷ்டங்கள் விலகி இறைவனின் அருளால் நன்மைகள் தேடி வரும்.

ஜோதிடமாமணி லயன் கே. விஷ்வேரன்