டெல்லி: 2015ம் ஆண்டு சட்டசபை சொத்துக்களை சேதப்படுத்தியது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வன்முறையில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டடு, கேரள அரசு தொடர்ந்த வாபஸ் வழக்கை தள்ளுபடி செய்தது.
சட்டமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்ட கேரள எல்எடிஎஃப் எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கை திரும்பப்பெற அனுமதி கோரி பினராயி விஜயன் தலைமையிலான அரசு உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம், மாநில அரசை கடுமையாக சாடியதுடன், அரசின் மனுவை தள்ளுபடி உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு கேரள மாநிலத்தில் முதல்வர் உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. அப்போது மாநில நிதிஅமைச்சராக மறைந்த கே.எம்.மணி இருந்தார். மாநில பட்ஜெட் தாக்கல் நாளன்று, அப்போதைய நிதியமைச்சர் மறைந்த கே.எம்.மணியை எதிர்த்து கேரள சட்டமன்றத்தில் அப்போதைய இடது எதிர்க்கட்சியான கம்யூனிஸ்டு கட்சி (பிரனராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்டு கட்சி) முரட்டுத்தனத்தை உருவாக்கியது. நிதி அமைச்சரை பட்ஜெட் தாக்க அனுமதி மறுத்து, அவரை சபைக்குள் விடாமல் தடுத்து அமளியில் ஈடுபட்டதுடன், பெண் எம்எல்ஏக்கள் மீது தாக்குதல் நத்தியதுடன், சட்டசபையை வன்முறைக்களமாக மாற்றி, பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தனர். பட்ஜெட் தாக்கல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, தற்போது ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்) 6 சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு, அங்கிருந்த பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக மாநிலஅரசு வழக்கு பதிவு செய்து வன்முறையில் ஈடுபட்ட 6 எல்டிஎஃப் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது குற்றம்சாட்டியிருந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், 6 எம்எல்ஏக்களையும் குற்றவாளி என அறிவித்தது. ஆனால், பினராயி விஜய் தலைமையிலான அரசு பதவிக்கு வந்தவுடன், வழக்கை வாபஸ் பெற முயற்சி எடுத்தது. ஆனால், அதை உயர்நீதிமன்றம் ஏற்காத நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட் மற்றும் எம்.ஆர் ஷா ஆகியோரின் பெஞ்ச்சில் விசாரணைக்கு வந்தது. அப்பபோது, “சட்டசபையின் சொத்துக்களை அழிப்பதை, சட்டமன்ற உறுப்பினர்களின் பேச்சு சுதந்திரத்துடன் ஒப்பிட முடியாது. எதிர்ப்பு என்ற பெயரில் சட்டசபை சொத்து அழிக்கப்பட்டதை ஏற்க முடியாது என்றும் கூறியது,
சட்டமன்றம் / பாராளுமன்றத்தில் எம்.எல்.ஏக்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் சலுகைகள் “அந்தஸ்தின் அடையாளமாக இல்லை, இது அவர்களை (சட்டமன்ற உறுப்பினர்கள்) சமமற்ற நிலையில் நிற்க வைக்கிறது” என்று உச்ச நீதிமன்ற பெஞ்ச் மேலும் தீர்ப்பளித்தது. இந்த சலுகைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி “குற்றவியல் சட்டத்திலிருந்து விலக்கு கோருவதற்கான நுழைவாயில் அல்ல, அது குடிமக்களுக்கு காட்டிக் கொடுக்கும்.
இப்போது விசாரணைக்கு உட்படுத்தப்படும் 6 இடதுசாரி எம்.எல்.ஏ.க்கள் பொதுக் கல்வி அமைச்சர் வி.சிவான்குட்டி, முன்னாள் உயர்கல்வி அமைச்சர் கே.டி.ஜலீல், முன்னாள் கைத்தொழில் அமைச்சர் இ.பி.ஜெயராஜன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏக்கள் கே அஜித் (சிபிஐ), சி.கே. . இந்த உத்தரவில் உள்ள பெஞ்ச், “உறுப்பினர்களின் செயல் அரசியலமைப்பு வரம்புகளை மீறி உள்ளது என்று கடுமையாக சாடியது. எம்எல்ஏ, எம்பிக்களுக்கு வழங்கியிருக்கக்கூடிய பதவி என்பது எந்தவிதமான தடையும் இல்லாமல், எதற்கும் பயப்படாமல் அவையில் தங்களுக்கான பொதுப் பணியை செய்வதற்காக தானே தவிர இதுபோன்று கிரிமினல் குற்றங்களில் இருந்து தப்பிப்பதற்கு அல்ல என்றும் கூறி உள்ளது.
மேலும், கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உறுதிசெய்ததுடன், வன்முறையில் ஈடுபட்ட 6 சட்டமன்ற உறுப்பினர்கள்மீது, இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர வேண்டும் என்றும் தீர்ப்பளித்து, கேரள மாநில அரசின் மனுவை தள்ளுபடி செய்தது.