டில்லி,
பணம் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து, மக்கள் தங்கத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து நாடு முழுவதும் உள்ள நகைக்கடைகள் கண்காணிக்கப்பட்டன.
இதில் 400 நகைக்கடைகளில் தங்கம் விற்பனை அதிகரித்துள்ளதும், ஒரே நகை கடையில் 201 கிலோ தங்கம் விற்பனை செய்யப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறி விக்கப்பட்டதும் நிறைய பேர் அந்த நோட்டுகளைக் கொடுத்து விட்டு தங்கமாக வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியான 8-ந்தேதி இரவு பல நகை கடைகளில் விடிய விடிய வியாபாரம் படு ஜோராக நடைபெற்றது. இதனால் ஒரே நாளில் தங்கத்தின் விலை ரூ.1500 வரை அதிகரித்த்து.
இதையடுத்து உஷாரான வருமானவரித்துறையினர், பல இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தி ரூ.25 கோடி அளவிலான கருப்பு பணத்தை கைப்பற்றினர்.
மேலும் பிரபல நகைகடைகளில் 8ந்தேதி முதல் பதிவாகி உள்ள சிசிடிவி புட்டேஜ்களை தரும்படியும் கோரிக்கை விடுத்தனர். மேலும் தங்கம் வாங்குபவர்கள் கண்டிப்பாக பான் எண் கொடுக்க வேண்டும் என்ற அதிரடி அறிவிப்பையும் வெளியிட்டனர்.
இருந்தாலும் தங்கம் விற்பனை குறைந்தபாடில்லை. இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள முக்கியமான நகை கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நகைகடைகளில் அதிரடி சோதனை நடத்தி, குறிப்பிட்ட தொகைக்கு மேல் பழைய நோட்டுகளை கொடுத்து விட்டு தங்கம் வாங்கி சென்றவர்கள் குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களை கண்காணித்து வந்தனர். இந்தியாவில் 25 நகரங்களில் இந்த கண்காணிப்பு ரகசியமாக நடைபெற்றதாக வருமானவரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தியா முழுவதும் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட நகை கடைகள் உள்ளன. சென்னை உள்பட முக்கிய நகரங்களில் பிரபல நகைக்கடைகளில் கடந்த 4 நாட்களாக பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் சட்ட விரோதமாக வாங்கப்பட்டு அவர்களுக்கு தங்கம் விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது. அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளதாக கூறினார்.
மேலும், ஒரு நகைக் கடைக்காரர் மட்டும் கடந்த 4 நாட்களில் 201 கிலோ தங்கம் விற் பனை செய்தது கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. மேலும் 400 கடைகளிலும் அதிக அளவு தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக அந்த நகை கடையின் கணக்குகளை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.