தோனி-யின் 14 ஆண்டுகால வெற்றியின் துவக்கம் – 2007 டி20 உலகக் கோப்பை

Must read

 

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரசிகர்களை கொண்ட கிரிக்கெட் வீரராக மகேந்திர சிங் தோனி இருக்கிறார்.

கிரிக்கெட் ரசிகர்களை தனது பக்கம் கட்டிப்போட்டு வைத்திருந்த சச்சின் டெண்டுல்கர் போன்ற ஜாம்பவான்கள் அடங்கிய அணியில் ஆடத்துவங்கிய தோனி, தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை வெகுவாகப் பயன்படுத்திக்கொண்டார்.

இதன் மூலம் அணியின் தேர்வாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பிய தோனி 2007 ம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற முதல் டி20 உலக கோப்பை போட்டிக்கு இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

பதினான்கு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில், செப்டம்பர் மாதம் 24 ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான இறுதியாட்டத்தில் வென்று 2007 ம் ஆண்டு டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றது.

இதன் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த மகேந்திர சிங் தோனி இப்போது வரை ரசிகர்களிடமும் இந்திய கிரிக்கெட் வாரியத்திலும் தனக்கான இடத்தை விட்டுக்கொடுக்காமல் உள்ளார்.

More articles

Latest article