திருப்பதி:

திருப்பதியில் நாள் ஒன்றுக்கு 20,000 இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும் என்று திருப்பதி கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து திருப்பதி கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா விதிகளின்படி, நாள் ஒன்றுக்கு 20,000 இலவச தரிசன டோக்கன் ஆன்லைனிலும், 10,000 டோக்கன்கள் நேரிலும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா தடுப்பூசி மத்திய அரசால் வழங்கப்படுவதால் பக்தர்கள் அதிகமாக வருவதை கருத்தில் கொண்ட தேவஸ்தானம், இலவச தரிசன டோக்கன்களை மேலும் 10 ஆயிரம் அதிகரித்து தினசரி 20 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் என இனி மொத்தம் 40ஆயிரம் டோக்கன்கள் வழங்க முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]