சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்பட்டு வரும் ரேஷன் கடைகளில் காலியாக  2,000 பணியிடங்களு தகுதியுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப் பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  சென்னையில் மட்டும் 348 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கூட்டுறவுத் துறையின் கீழ், பல்வேறு கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும், 33 ஆயிரத்து, 500 ரேஷன் கடைகளில் விற்பனையாளர், எடையாளர் பதவிகளில், 25 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். ஊழியர் பற்றாக்குறையால், ஒருவரே இரண்டு, மூன்று கடைகளை கூடுதலாக கவனிக்கின்றனர். இதனால், அவர்களுக்கு அதிக பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காலியாக உள்ள பணிகளுக்கு ஆட்களை சேர்க்க அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலை கடைகளில் காலியாக உள்ள 2,000 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட உள்ளது. அதன்படி,   விற்பனையாளர் பணிக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சியும், கட்டுநர் (Paker) பணிக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும்,  எழுத்துத் தேர்வின்றி, நேரடி நியமனம் நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த பணிக்கு தகுதியானவர்கள்,   drbchn.in என்ற இணையதளம் மூலம் நவம்பர் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு  உள்ளது.

இந்த ஆண்டில் கூட்டுறவுச் சங்கங்களில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய ஆள்சேர்க்கை நடவடிக்கை இதுவாகும். அரசு வேலையை தங்கள் கனவாக கொண்டவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அந்தந்த மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்திற்கு (DISTRICT RECRUITMENT BUREAU-2023 ) சென்று காலியிட விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.