டில்லி

முன்னாள் மக்களவை உறுப்பினர்களில் 200 பேர் அரசு அளித்த இல்லங்களை காலி செய்யாமல் உள்ளனர்.

மக்களவை உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் டில்லியில் உள்ள லைடியன் பகுதியில் குடியிருப்புக்கள் அளிக்கப்படுகின்றன.  இந்த இல்லங்களில் வசிக்கும் உறுப்பினர்கள் மக்களவை கலைக்கப்பட்ட ஒரு மாதங்களுக்குள் காலி செய்ய வேண்டும் என்பது விதி முறை ஆகும்.   இந்தியாவின் 16  ஆம் மக்களவையைக் கடந்த மே மாதம் 25 ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலைத்து உத்தரவிட்டார்.

தற்போது தேர்தல் முடிந்து 17 ஆம் மக்களவை உறுப்பினர்கள் பதவி ஏற்றுள்ளனர்.  ஒரு மக்களவை கூட்டத் தொடர் முடிவடைந்துள்ளது.   ஆயினும் முன்னாள் மக்களவை உறுப்பினர்கள் 200 பேர் தங்கள் இல்லத்தை காலி செய்யாமல் உள்ளனர்.  இது குறித்து பலமுறை நினைவூட்டப்பட்டும் அவர்கள் காலி செய்யவில்லை என அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றன.

இதனால் புதியதாகத் தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்களுக்குத் தங்க இடம் இல்லாத நிலை உள்ளது.  அவர்கள் அரசு செலவில் தற்காலிகமாகப் பல இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.   தற்போது அவர்கள் ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதால் அரசுக்குச் செலவு அதிகரித்துள்ளது.