டில்லி

பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழாவில் காசியை சேர்ந்த 200 பிரபலங்கள் கலந்துக் கொள்கின்றனர்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காசி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு பிரதம்ர் மோடி வெற்றி பெற்றுள்ளார். அவர் இன்று இரண்டாம் முறையாக பிரதமராக பங்கேற்க உள்ளார். இன்று மாலை ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் இந்த பதவி ஏற்பு விழாவுக்கு அனைத்து முக்கிய தலைவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

பிரதமரின் காசி தொகுதியில் இருந்து சுமார் 200 பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுள்ளது. அனைவரும் அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ளனர். இவர்களில் பிரபல சங்கீத வித்வான்கள், விவசாயிகள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், ஜோசியர்கள், அர்ச்சகர்கள், தொழிலதிபர்கள், பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள், நகராட்சி உறுப்பினர்கள் ஆகியோர் உள்ளனர்.

மோடியின் வேட்பு மனுவை முன் மொழிந்த நால்வரான அன்னபூர்ணா சுக்லா, ராமசங்கர் படேல், சுபாஷ் குப்தா, ஜகதீஷ் சவுத்ரி அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களை தவிர காசி விஸ்வநாதர் கோவில் காப்பாளர் அசோக் திவிவேதி, சங்கட மோட்சன் கோவில் தலைமை அர்ச்சகர் விஸ்வம்பர் நாத் மிஸ்ரா, அன்னபூர்ணா ஆலய தலைமை அர்ச்சகர் ராமேஸ்வர் பூரி, பிரபல பாடகர்கள் பத்மபூஷன் சன்னுலால் மிஸ்ரா, ராஜன், மற்றும் சாஜன் மிஸ்ரா, விளையாட்டு வீரர் பத்மஸ்ரீ பிரசாந்தி சிங் ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை தவிர பிரபலங்களான பத்மஸ்ரீ சாமா மோஷ், பத்மஸ்ரீ ராஜேஸ்வர் ஆசார்யா, ஆகியோரும்  பனாரஸ் இந்து பல்கலைக்கழக துணை வேந்தர் ராகேஷ் பட்நாகர், மகாத்மா காந்தி காசி வித்யாபீட் துணை வேந்தர் டி என் சிங், ராஜாரம் சுக்லா, உள்ளிட்ட கல்வியாளர்களும் சந்திரமவுலி உபாத்யாயா அசுதோஷ் தாண்டன் உள்ளிடோரும் விழாவில் கலந்துக் கொள்ள உள்ளனர்.