சென்னை,

சென்னை கோட்டையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 7வது ஊதிய குழு பரிந்துரைகளின்படி 20 சதவிகிதம் சம்பள உயர்வு அளிக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதன் காரணமாக அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எடப்பாடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு 7வது முறையாக தமிழக அமைச்சரவை கூட்டம் கூடியது.

இந்த கூட்டத்தில் தமிழகத்தை தற்போது மிரட்டி வரும் டெங்கு காய்ச்சல் குறித்தும், தமிழக அரசியல் நிலவரம் குறித்தும்,  7வது சம்பள கமிஷன் அறிக்கை குறித்து விவாதிக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது.

அதைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், 7வது ஊதியக்குழு பரிந்துரைகளுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாகவும், இதன் காரணமாக அரசு ஊழியர்களின் சம்பளம் 20% வரை உயரும் என்றும் கூறப்படுகிறது.

மேலும்,  அங்கீகாரமில்லாத வீட்டுமனைகளை வரைமுறைப்படுத்தவும் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. மேலும், மதுபானங்களின் விலை உயர்வுக்கும் ஒப்புதல் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.