கர்நாடகாவில் 20 மயில்கள் ஒரே இடத்தில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தும்கூர் மாவட்டம் மதுகிரி தாலுகாவின் மிடிகேஷி ஹோப்ளி பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஹனுமந்தபூர் கிராமத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் 3 ஆண் மயில்களும் 17 பெண் மயில்களும் இறந்துள்ளன.
இச்சம்பவத்திற்கு அந்தப் பகுதியில் மக்காசோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் விஷம்வைத்ததாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட வனத்துறை அதிகாரிகள், ‘இறந்த மயில்கள் தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. அறிக்கை வந்த பிறகு இறப்புக்கான காரணம் தெரியவரும்’ என்று தெரிவித்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel