திருவனந்தபுரம்: கேரளாவில் வழிபாட்டுத் தலங்களில் ஒரே நேரத்தில் 20 பேர் மட்டுமே அனுமதி என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

கேரளாவில் நாள்தோறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன் வேகத்தை தடுக்க கேரள அரசு பல்வேறு கட்டுபாடுகளை அறிவித்து வருகிறது.
அதன்படி, இன்று முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது: கேரளாவில் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் ஒரே நேரத்தில் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். கோயில்களில் சிறப்பு பூஜை, மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்களில் பிரார்த்னைகள் செய்யப்படும் நேரங்களில் மட்டும் 40 பேர் வரை அனுமதிக்கலாம் என்று அறிவித்துள்ளார்.