மிடாடானோ:

பிலிப்பைன்ஸ் நாட்டில்  உள்ள ஒரு தேவாலயம் ஒன்றில் அடுத்தடுத்து நடைபெற்ற 2 குண்டு வெடிப்பு காரணமாக 20 பேர் உடல்சிதறி பரிதாபமாக உயரிழந்தனர். மேலும் 80க்கும் மேற்பட்டடோர் காயமுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் சூலு மாகாணத்தில் மாடானோ நகரத்தில் உள்ள ஷோலோ கத்தோலிக் தேவாலயத்தில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது  திடீரென சக்தி வாய்ந்த 2 குண்டுகள் அடுத்தடுத்து வெடித்து சிதறின.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த கோர விபத்தில் குறைந்தது 20 பேர் உடல்சிதறி பலியாகி இருப்பதாகவும், 81 பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இவர்களில் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த குண்டுவெடிப்பை நடத்தியது ,  “கிழக்கு ஆசியா மாகாணம்”  என்ற கோரிக்கையை எழுப்பி போராடி வரும் ஐ.எஸ்.ஐ. அமைப்பு என கூறப்படுகிறது.