உத்தர பிரதேஷ், பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட அரிசி அதிகம் விளையும் மாநிலங்களில் மழை குறைந்தததால் அரிசி விளைச்சல் குறைந்துள்ளது.
இதனால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அரிசிக்கு 20 சதவீதம் ஏற்றுமதி வரி விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
தவிர, அரிசி நொய் ஏற்றுமதிக்கு முழுமையாக தடை விதித்துள்ளது. இந்த புதிய அறிவிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
எனினும், செப். 9 முதல் 15 வரை வெளிநாட்டுகளுக்கு ஏற்றுமதி செய்ய சுங்கத்துறை அனுமதியுடன் துறைமுகத்தில் தயாராக இருக்கும் சரக்குகளுக்கு தகுந்த ஆவணங்களைக் கொண்டு விலக்கு அளிக்க முன்வந்துள்ளது.
மழை குறைந்ததால் நாட்டில் அரிசி உற்பத்தி குறைந்துள்ளதாகவும் இதனால் அரிசி விலை உயர வாய்ப்புள்ளதை அடுத்து மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.