போர்ட் பிளேர்:
அந்தமான் நிகோபார் தீவுகளில் திங்களன்று 20 முறை நில நடுக்கம் ஏற்பட்டது.
நில நடுக்கம் 4.5 ரிக்டர் முதல் 5.5 ரிக்டர் அளவுகோல் பதிவானதாக இந்திய வானிலை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதல் நில நடுக்கம் காலை 5.14 மணிக்கு ஏற்பட்டது. இது 4.9 ரிக்டர் அளவு பதிவானது. சற்று நேரத்தில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டு 5.0 ரிக்டர் அளவு பதிவானது.
காலை 5.16 முதல் 9.39 வரை 13 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. 10 மணிக்குப் பிறகு நிலநடுக்கம் ஏற்பட்டது.
பிற்பகல் 1.40க்கு ஏற்பட்ட நிலநடுக்கம் 5.5 ரிக்டர் அளவு பதிவானது. அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் இது பெரிதாக உணரப்பட்டது.
கடைசியாக பிற்பகல் 3.44 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம்,4.8 ரிக்டர் அளவு பதிவானது.