பாங்காக்: தாய்லாந்தில் பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 20 பேர் பலியாகி உள்ளனர்.

அந்நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து சாச்சோ யெங்சாவோ மாகாணத்தில் உள்ள புத்தர் கோயிலுக்கு ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. கிலாங் கவீங் கிலன் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே கிராசிங்கை பேருந்து கடக்க முயன்றது.
அப்போது அவ்வழியாக வந்த ரயில், பேருந்து மீது பயங்கரமாக மோதியது. மோதி வேகத்தில் பேருந்து தூக்கி எறியப்பட்டது. விபத்தில் பேருந்தில் பயணித்த 20 பேர் பலியாகினர்.
படுகாயம் அடைந்த பலர், உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். பலர் படுகாயம் அடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று  அஞ்சப்படுகிறது.

[youtube-feed feed=1]