மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தின் துலே பகுதியில்உ ள்ள ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 50 பேர் காயமுடன் மீட்கப்பட்டு உள்ளனர். மேலும் ஆலைக்குள் சிக்கியுள்ள 70 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை.
இந்த வெடி விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மகாராஷ்டிரா மாநிலம் தூலே அருகே உள்ள ஷிர்பூரில் ரசாயன ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று அதிகாலை வழக்கம் போல் பணிகள் நடைபெற்று வந்தது, திடீரென அங்கிருந்த பாய்லர் வெடித்துச் சிதறியது. இந்த எதிர்பாராத வெடி விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்த நிலையில், ஆலை மூழுவதும் தீப்பற்றி எரிந்தது.
இந்த தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், 20 பேர் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது. 50க்கும் மேற்பட்டோர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், ஆலையினுள் பணியில் இருந்த மேலும் 70 பேர் நிலை என்ன என்பது தெரிய வில்லை. அவர்களை மீட்க தீயணைப்புத்துறை மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. வெடி விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.