டில்லி,
தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேர் சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல் முறையீடு மனு மீதான விசாரணை இன்று டில்லி உயர்நீதி மன்றத்தில் நடைபெற உள்ளது.
இன்றைய விசாரணையின்போது, எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து குடியரசு தலைவர் பிறப்பித்த உத்தரவுக்கு ரத்து செய்யப்படுமா? அல்லது வழக்கு தள்ளுபடி செய்யப்படுமா என்பது குறித்து பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
70 எம்எல்ஏக்கள் உள்ள டில்லி சட்டசபையில் 67 இடங்களை கைப்பற்றி டில்லியில் ஆத்ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இரட்டை ஆதாயம் தரும் பதவி வகித்ததாக குற்றம் சாட்டப்பட்ட 20 ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் பதவியை தேர்தல் ஆணையம் பரிந்துரையின்பேரில் குடியரசு தலைவர் ரத்து செய்து அறிக்கை வெளியிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு, ஆம்ஆத்மி சார்பில் டில்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்கை நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.