டெல்லி: இந்தியாவில்  கடந்த 24மணி நேரத்தில் மேலும் 6,563 பேருக்கு கொரோனா தொற்று பாதிபபு உறுதியாகி  உள்ளது. மேலும், 132 பேர் பலியான நிலையில், 8077 பேர் குணமடைந்து உள்ளனர். இதற்கிடையில் பிறழ்வு தொற்றான ஒமிக்ரான் பாதிப்பு  இதுவரை 153 ஆக உயர்ந்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம்  இன்று  காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்திலான கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டு உள்ளது. அதன்படி, நாடு முழுவதும்  புதிதாக மேலும், 6,563 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு  3,47,46,838 ஆக உயர்ந்தது.

நேற்று மேலும் 132 பேர் சிகிச்சைபலனின்றி இறந்துள்ளனர். இதன் மூலம், மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 477554 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.37% ஆக குறைந்துள்ளது.

கடந்த 24மணி நேரத்தில், தொற்றில் இருந்து  8077 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம்,  குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 34187017ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.39% ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும்  82267 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.24% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை  1,37,67,20,359 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 15,82,079 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை  66,51,12,580 சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளது.  நேற்று ஒரே நாளில்8,77,055 சோதனைகள் செய்யப்பட்டு இருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது.

இதற்கிடையில் தென்னாப்பிரிக்காவில் இருந்து பரவத்தொடங்கி உள்ள ஒமிக்ரான் வைரஸ் இந்தியா உள்படஉலகின் 89  நாடுகளில் பரவி உள்ளது. இந்தியாவில் ஒமிக் தொற்று பரவல் 153 ஆக உயர்ந்துள்ளது. 

அதன்படி,  மகாராஷ்டிரா மாநிலத்தில் 54 பேருக்கும், தலைநகர் டெல்லியில் 22, தெலுங்கானா 20, ராஜஸ்தான் 17, கர்நாடகா 14, குஜராத் மற்றும் கேரளா 11, ஆந்திரா, சண்டிகர், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா ஒன்று என மொத்தம் 153 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.