சென்னை: தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1,179 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் 157 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. மாநிலத்தில் அதிக பாதிப்பு சென்னையில் பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று புதிதாக 1,179 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 89 ஆயிரத்து 463 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று 16 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 928 ஆக அதிகரித்துள்ளது.
அதேசமயம், கொரோனா சிகிச்சை முடிந்து நேற்று மேலும் ஆயிரத்து 407 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 39 ஆயிரத்து 209 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகம் முழுவதும் தற்போது வரை 14 ஆயிரத்து 326 பேர் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தலைநகர் சென்னையில் நேற்று புதிதாக மேலும், 156 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னையில் இதுவரை 5,53,079 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 8,530 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று 159 பேர் குணம் அடைந்து, இதுவரை மொத்தம் 5,42,778 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது சென்னையில் 1,771 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையிலேயே அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 180 பேருக்க தொற்று பாதிப்பு காணப்படுகிறது. குறைந்தபட்சமாக மணலியில் 21 பேர் உள்ளனர். இம்மாதம் (அக்டோபர்) 5ஆம் தேதி சென்னையில் ஒரு நாள் கரோனா பாதிப்பு 179 ஆக இருந்த நிலையில் 15 நாள்களுக்குப் பின் தற்போது அது 156 ஆக உள்ளது.