டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று ஒரே நாளில் 69ஆயிரத்துக்கும் மேற்பட்டோ ருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால், பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை  28,35,822 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிரா, தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடக உள்பட குறிப்பிட்ட 10 மாநிலங்களில தொற்று பாதிப்பு தீவிரமாகி உள்ளது. இதை தடுக்க மத்திய மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன. தினசரி அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பில்,  உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது..

நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 69,196 பேருக்கு  அதிகரித்து மொத்த எண்ணிக்கை  28,35,822 ஆக  உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போதைய நிலையில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 6,85,231 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா  தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை 20,96,068ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 59,365 பேர் குணமடைந்து உள்ளனர். தொடர்ந்து குணமடை வோர் சதவிகிதம் அதிகரித்து வருகிறது.

நேற்று ஒரே நாளில் 979 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், இதுவரை   உயிரிழந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 53,994 ஆக அதிகரித்து உள்ளது.

இந்தியாவில் தொற்று பாதிப்பில்  மகாராஷ்டிரா மாநிலம்  முதலிடத்தில் உள்ளது. அங்கு  நேற்று ஒரே நாளில் 13,165 பேருக்கு புதிதாக தொற்றுபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 6,22,642 ஆஆக அதிகரித்து உள்ளது.

2வது இடத்தில் தமிழகம் உள்ளது.  நேற்று 5795பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு 3,55,499 ஆக உள்ளது.

3வது இடத்தில் ஆந்திர மாநிலம் உள்ளது. இங்கு நேற்று ஒரே நாளில் 9742பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு 3,16,003 ஆக உயர்ந்துள்ளது.

4வது இடத்தில் கர்நாடக மாநிலம் உள்ளது, அங்கு நேற்று 8642 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,49,590 ஆக அதிகரித்துள்ளது.

5வது இடத்தில்  உத்தரபிரதேச மாநிலமும் தொடர்ந்து வருகிறது. 6வது இடத்தில் தலைநகர் டெல்லி உள்ளது.