டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,15,54,895 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால், பாதுகாப்பு நெறிமுறைகளையும் மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்தியாவில் 24 மணி நேரத்தில் 40,906 பேருக்கு கொரோனா பாதிப்பும், 154 பேர் பலியாகியுள்ளனர். அதே வேளையில் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. இதுவரை 3,93,39,817 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், 40,906 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டந்த 110 நாட்களில் இதுவே அதிகளவிலானோர் பாதிக்கப்பட்டதாகும். இதற்கு முன்பு, கடந்தாண்டு நவம்பர் 29ம் தேதி ஒரே நாளில் 41,810 பேர் பாதித்தனர். இதனால் தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எணிக்கை 1,15,54,895 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,85,449 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மட்டும், 23,623 பேர் குணமடைந்த நிலையில்,. இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கையானது 1 கோடியே 11 லட்சத்து 5 ஆயிரத்து 149 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 188 பேர் கொரோனாவால் பலியாகினர். இதனால், பலி எண்ணிக்கை 1,59, 594 ஆக உள்ளது.
தமிழகத்தில் 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் 1,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு. தமிழகத்தில் ஒரே நாளில் 1,087 பேருக்கு கொரோனா. கொரோனாவுக்கு மேலும் 9 பேர் உயிரிழந்தனர். கொரோனாவில் இருந்து 610 பேர் குணமடைந்தனர். சென்னையில் 421 பேருக்கு கொரோனா பாதிப்பு. செங்கல்பட்டு, கோவையில் பாதிப்பு 100-ஐ கடந்தது.
இந்தியாவில் தொற்று பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடத்தில் தொடர்ந்து வருகிறது.