சென்னை

மிழகத்தில் இன்று 949 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,44,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 80,755 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,38,90,901 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 949 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 34,44,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 3 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 37,980 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 3,172 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 33,91,011 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 15,938 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 223 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 7,48,811 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை.  இதுவரை 9,056 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 561 பேர் குணம் அடைந்து மொத்தம் 7,36,768 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 2,987 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 136 உடன் இரண்டாம் இடத்திலும் செங்கல்பட்டு 92 உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

மொத்த பாதிப்பில் இரண்டாவதாக உள்ள கோவை மாவட்டத்தில் 3,28,858 பேர் பாதிக்கப்பட்டு 2,612 பேர் உயிர் இழந்து 3,23,871 பேர் குணம் அடைந்து தற்போது 2,375 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த பாதிப்பில் மூன்றாவதாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,34,520பேர் பாதிக்கப்பட்டு 2,654 பேர் உயிர் இழந்து 2,30,666 பேர் குணம் அடைந்து தற்போது 1,200 பேர் சிகிச்சையில் உள்ளனர்.