‍காங்கிரசை நோக்கி நகரும் 2 தெலுங்கு தலைவர்கள்..!

Must read

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், காங்கிரஸ் கட்சியின் மீது தனது திடீர் பாசத்தை வெளிப்படுத்திய சூழலில், இன்னொரு தெலுங்கு மாநிலமான ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியும், காங்கிரஸ் மீதான தனது கரிசனத்தை வெளிக்காட்டியுள்ளார்.

மத்தியில் தொங்கு நாடாளுமன்றம் அமையும்பட்சத்தில், ஆட்சியில் பங்கேற்கும் வாய்ப்பை உறுதிசெய்து கொள்ளவே, இந்த இருவரும் இப்படியாக காங்கிரசை நோக்கி நகர்கிறார்கள் என்று அரசியல் வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

சில நாட்களுக்கு முன்னர் பேசிய ஜெகன்மோகன் ரெட்டி, காங்கிரசின் மீது தனக்கு கோபமில்லை எனவும், அக்கட்சியை மன்னித்துவிட்டதாகவும் கூறியிருந்தார்.

இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவெனில், இவரின் நேரடி அரசியல் எதிரியான தெலுங்குதேசம் கட்சி, இப்‍போது காங்கிரசின் மெகா கூட்டணியில் அங்கம் வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

– மதுரை மாயாண்டி

More articles

Latest article