சென்னை:
சென்னை நந்தனத்தில் இன்று காலை நடைபெற்ற கோர விபத்தில் ஒரே இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேரில், பின்னால் அமர்ந்திருந்த இரண்டு இளம்பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையின் பிரதான இடமான நந்தனம், ஒய்.ஏம்.சி.ஏ கல்லூரி எதிரே இரண்டு இளம்பெண் களை பின்னால் அமர வைத்து பைக்கை ஓட்டி வந்த நபர், மாநகர பஸ்சில் வேகமாக மோதி கீழே விழுந்ததில், இரண்டு இளம்பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தர சிவா , பவானி, நாகலட்சுமி ஆகியோர் எழும்பூர் பகுதியில் செயல் பட்டு வரும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் 3 பேரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் இன்று காலை பணிக்கு சென்றுகொண்டிருந்தனர். அவர்கள் நந்தனம் சந்திப்பு பகுதியில் அதி வேகமான வந்தபோது, முன்னாள் சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தின் பின்பகுதி யில் மோதி, நிலை தடுமாறி மூவரும் கீழே விழுந்தனர்.
இதில் தூக்கி வீசப்பட்டதில், பவானி நாகலட்சுமி ஆகியோர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகினர். சிவா உயிருக்கு ஆபத்தான நிலையில் ராயப்பேட்டை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தால் நந்தனம் பகுதியில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார், இந்த விபத்து குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.
விசாரணையில் விபத்தில் மரணமடைந்த இரண்டு பெண்கள் உள்பட 3 பேரும் வேளச்சேரி பகுதியில் வீடு எடுத்து தங்கி வேலைக்கு வந்து சென்றது தெரிய வந்துள்ளது.