டெல்லி: மத்தியஅரசு வழங்கும் நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தில் 2ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

ஆண்டுதோறும், திறமையான ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில், மத்தியஅரசு நல்லாசிரியர் விருது வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு நல்லாசிரியர் விருக்கு நாடு முழுவதும் 47 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
இவர்களில் தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்து, மத்திய கல்வி அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, விழுப்புரம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திலிப், சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சரஸ்வதி ஆகிய இருவருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர் 5-ம் தேதி சிறப்பாக பணியாற்றி தேசிய நல்லாசியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களுக்கு குடியரசு தலைவர் டெல்லியில் நடைபெறும் நிகழ்சியில் விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்படுவார்கள்.
[youtube-feed feed=1]