பீஜிங்

க்கவாதத்தினால் உடல் பாகங்கள் செயலிழந்து போன நோயாளிகளை தலை மாற்று அறுவை சிகிச்சை மூலம் நடமாட வைக்க சீனாவில் இரு மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

உறுப்பு மாற்று சிகிச்சை என்பது தற்போது சாதாரணமாகி வருகிறது.   மூளைச்சாவு அடைந்தவர்களின் இருதயம் உட்பட பல உடல் உறுப்புக்கள் தானம் அளிக்கப்பட்டு அதனால் பலர் உயிர் பிழத்து வ்ருகின்றனர்.  சிறுநீரகம் போன்ற உறுப்புக்கள் ஒவ்வொரு மனிதருக்கும் இரண்டு உள்ளதால் உயிரோடு இருக்கும்  போதே தானம் செய்ய முடிகிறது.

இதே போல தலையை மாற்றி அறுவை சிகிச்சை மூலம் பொருத்த ஆராய்ச்சி ஒன்றை இரு மருத்துவர்கள் சீனாவில்  நடத்தி வருகின்றனர்.     இத்தாலி நாட்டை சேர்ந்த செர்ஜியோ கனவெரோ மற்றும் சீனாவைச் சேர்ந்த ஜியொபிங் ரென் ஆகியோர் சமீபத்தில் எலிகளுக்கு இது போல அறுவை சிகிச்சை அளித்து வெற்றி கண்டுள்ளனர்.   இவ்வாறு மனிதர்களுக்கு தலை மாற்றி அமைப்பதால் பக்கவாதம் போன்ற நோய்களால் கை மற்றும் கால்கள் உள்ளிட்ட உறுப்புக்கள் சேதமடைந்தால் மீண்டும் செயல்பட செய்ய முடியும் என அறிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள், ”அறுவை சிகிச்சையின் போது தலை முழுவதுமாக துண்டிக்கப்படுவதால் கழுத்தில் ஒரு போல்ட் பொருத்தப்பட்டு அதன் மூலம் மின்சாரம் செலுத்தப்பட்டு உடல் அசைவில் வைக்கப்படும்.   அதனால் உடலில் உள்ள இருதயம், நுரையீரல் உள்ளிட்ட உறுப்புக்கள் இயங்கியவாறு இருக்கும்.

அந்த நேரத்தில் புதிய தலையில் உள்ள நரம்புகள், எலும்புகள் மற்றும் ரத்தக் குழாய்கள் இணைக்கப்படும்.     இதற்கு சுமார் 18 மணி நேரம் தேவைப்படும்.  இதை நாங்கள் ஏற்கனவே எலிகள் போன்ற உயிரினங்களை வைத்து பரிசோதனை நடத்தி வெற்றி கண்டுள்ளோம்.  இதன் மூலம் கை கால் விளங்காத பலர் பலனடைவார்கள்” என தெரிவித்துள்ளனர்.

இதற்கு ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழக நரம்பியல் நிபுணர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.   இவ்வாறு மனிதர்களுக்கு தலை மாற்றம் செய்வது கிரிமினல் நடவடிக்கை என தெரிவித்துள்ளார்.   இதே கருத்தை பல விஞ்ஞானிகளும் அறுவை சிகிச்சை வல்லுனர்களும் தெரிவித்துள்ளனர்.