கோவை
கடந்த 5 ஆம் தேதி கோவை கணபதி பகுதியில் உள்ள ஒரு மசூதியில் பெட்ரோல் குண்டு வீசிய இரு இந்து சங்க அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை நகரில் கடந்த 4 ஆம் தேதி இரவு இந்து முன்னணி பொறுப்பாளர் ஆனந்த் என்பவர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதையொட்டி மருத்துவமனை முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் திரண்டு போராட்டம் நடத்தினர். அதையொட்டி நகர் முழுவதும் பலத்த காவல் போடப்பட்டது
ஆனால் 5 ஆம் தேதி அன்று கணபதியில் உள்ள வேதம்பரள் நகர மசூதியின் வாசலில் இருவர் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசி உள்ளனர். அந்த நபர்கள் சரியாக வீசாததால் பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை. அதனால் மசூதியில் இருந்தவர்கள் உயிர் பிழைத்தனர். காவல்துறையினர்க் குண்டு வீசிய நபர்களைத் தேடி வந்தனர்.
காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விஸ்வ இந்து பரிஷத்தை சேர்ந்த அகில் மற்றும் பாஜக உறுப்பினர் பாண்டி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் ஆர் எஸ் எஸ் அனுதாபிகள் ஆவார்கள் அவர்களிடம் நடந்த விசாரணையில் தாங்கள் மசூதியில் குண்டு வீசியதை இருவரும் ஒப்புக கொண்டுள்ளனர். இந்து முன்னணி பொறுப்பாளர் ஆனந்த் தாக்கப்பட்டதற்கு பழி வாங்கவே தாங்கள் இதைச் செய்ததாக தெரிவித்துள்ளனர்.