கல்பாக்கம்
சென்னையை அடுத்த கல்பாக்கம் அருகே 2 போலி மதுபான ஆலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு கல்பாக்கம் அடுத்துள்ள பூந்தண்டலம் மற்றும் நெய்க்குப்பி ஆகிய பகுதிகளில் போலி மதுபான ஆலை இயங்குவதாக தகவல்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில் நுண்ணறிவு பிரிவு சூப்பிரண்டு சுப்புலட்சுமி, டிஎஸ்பி தட்சிணாமூர்த்தி, மதுவிலக்கு அமல் பிரிவு எஸ் பி பெருமாள் ஆகியோர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் பூந்தண்டலம் பகுதியில் உள்ள ஒரு சொகுசு பங்களாவிலும் நெய்க்குப்பி பகுதியில் உள்ள ஒரு வீட்டிலும் போலி மதுபானம் தயாரிப்பது கண்டு[ட்டிக்கபப்ட்டது. இந்த இரு இடங்களிலும் இருந்த காலி மது பாட்டில்கள், மதுபானம் தயாரிக்கும் இயந்திரங்கள், லேபிள்க்ள் ஸ்டிக்கர்கள், கலர்பவுடர் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த பொருட்களின் மதிப்பு ரூ.31 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை நகருக்கு மிக அருகே உள்ள கல்பாக்கம் அருகே 2 போலி மதுபான ஆலைகள் கண்டறியப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.