சென்னை
மத்திய அரசால் தடை செய்யப்பட்ட மின் சிக்ரெட்டுக்களை கடத்தி வந்ததாகச் சென்னை பன்னாட்டு விமான முனையத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புகைப் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த பயன்படும் எனக் கூறி இ சிகரெட்டுக்கள் என அழைக்கப்படும் மின் சிகரெட்டுக்கள் விற்பனைக்கு வந்தன. ஆனால் இந்த சிகரெட்டில் அதிக அளவில் நச்சுப்பொருட்க்ள் உள்ளதால் வழக்கமான சிகரெட்டுகளை விட இவை தீமை விளைவிக்கும் என கண்டறியப்பட்டது. அதையொட்டி இந்திய அரசு இந்த மின் சிக்ரெட்டுகளை தயாரிப்பது, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்வது, எடுத்துச் செல்வது, விற்பனை, இருப்பில் வைத்தல், விளம்பரம் செய்தல் ஆகியவற்றைத் தடை செய்துள்ளது.
இந்நிலையில் சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு ஒரு சிலர் மின் சிகரெட்டுக்களை கடத்தி வருவதாகத் தகவல்கள் வந்தன. அதையொட்டி நட்னத சோதனையில் மின் சிக்ரெட்டுக்களை கடத்தி வந்த சென்னையை சேன்ர்த சையத் இப்ராகிம் மற்றும் முகமது ரிபால் ஆகியோர் பிடிபட்டுள்ளனர். இவர்கள் தாய் ஏர்வேஸ் விமானத்தில் ஹாங்காங் கில் இருந்து வந்துள்ளனர். இவர்களிடம் 84 மின் சிகரெட் பாக்கெட்டுக்கள் பிடிபட்டன.
மேலும் நடந்த சோதனையில் இவ்விருவரிடம் இருந்து ரூ.6.2 லட்சம் மதிப்பிலான தங்கம், ரூ.21.2 லட்சம் மதிப்பிலான மொபைல்கள் மற்றும் லாப்டாப்புகள் பிடிபட்டுள்ளன. மின் சிகரெட்டுகளில் மதிப்பு மட்டும் ரூ..1.1 லட்சம் ஆகும். இந்த இரு கடத்தல் பேர்வழிகளும் கைது செய்யப்பட்டு வழக்குப் பதியப்பட்டுள்ளது.