சென்னை
கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளி தாளாளர் சிவசங்கர் பாபா மீது மேலும் 2 போக்சோ வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி பள்ளி தாளாளர் சிவசங்கர்பாபா தனது பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், ஏற்கனவே செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் நான்கு வழக்குகளும், பெண்களை மானபங்கம் படுத்தியதாக செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகளும் நடைபெற்று வருகிறது.
தற்போது சென்னை மெட்ரோபாலிடன் சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபா மீது மேலும் இரண்டு போக்சோ வழக்குகள் பதிவு செய்துள்ளனர். நேற்று இந்த வழக்கு விசாரணைக்காகச் செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் சென்னை சிபிசிஐடி காவல்துறையினர் சிவசங்கர் பாபாவை முன்னிறுத்தினர்.
நீதிபதி தமிழரசி, சிவசங்கர் பாபாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார் மேலும் 4.1.2022 அன்று மீண்டும் சிவசங்கர் பாபாவை முன்னிறுத்தவும் உத்தரவிட்டார். சிவசங்கர் பாபா மீது இதுவரை 6 போக்சோ வழக்குகளும், பெண்களை மானபங்கம் படுத்தியதாக 2 வழக்குகள் என 8 வழக்குகள் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.