வெலிங்டன்: நியூசிலாந்து பிரதமர் ஜெஸிந்தா ஆர்டன் தனது இரண்டாண்டு கால ஆட்சியின் சாதனைகள் குறித்து வெளியிட்ட 2 நிமிட வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
நியூசிலாந்து நாட்டின் தொழிலாளர் கட்சியினுடைய இளம் தலைவராக இருந்த 37 வயது ஜெஸிந்தா ஆர்டன், அந்நாட்டில் நடைபெற்ற மசூதி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது, தனது செயல்பாட்டால் உலகின் கவனம் கவர்ந்தவர்.
நியூசிலாந்துப் பிரதமராக அவர் பதவியேற்று 2 ஆண்டுகள் ஆகியுள்ளது. எனவே, இரண்டாண்டுகளின் தான் மேற்கொண்ட பணிகள் குறித்து, வெறும் 2 நிமிடங்களில் விளக்கி வீடியோ ஒன்றை வெளியிட்டு பலரின் கவனத்தைக் கவர்ந்துள்ளார்.
“92000 வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டன, 2200 அரசு கட்டடங்கள் கட்டப்பட்டன, கார்பன் வெளியேற்றத்தை பூஜ்யம் ஆக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. நாட்டின் நெடுஞ்சாலைகள் பாதுகாப்பானதாக ஆக்கப்பட்டது மற்றும் சிறைக் கைதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட அம்சங்கள் அதில் அடங்கியுள்ளன.
இந்த வீடியோவின் மொத்த நேரம் 2 நிமிடங்கள் மற்றும் 56 நொடிகளே இருக்கிறது. இதுதான் பலரின் கவனத்தையும் பாராட்டையும் ஈர்த்துள்ளது.