ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் கைது…!

Must read

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனர்.

பாப்பச்சன் பந்திப்போரா பாலம் அருகே பாதுகாப்புப் படையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். ஒரு சோதனைச் சாவடி அருகே தடை செய்யப்பட்ட அமைப்பான லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இருவரும் வடக்கு காஷ்மீர் பந்திபோராவில் வசிக்கும் அபிட் வாசா மற்றும் பஷீர் அகமத் கோஜர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. பந்திபோராவில் பாதுகாப்புப் படையினர் மீது குண்டுகளை வீசியபோது பாதுகாப்புப் படையினர் அவர்களை கைது செய்து குண்டுகளை மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article