
அக்னூர்
காஷ்மீர் மாநிலத்தில் அக்னூர் பகுதியில் இன்று காலை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இரு இந்திய வீரரக்ள் மரணம் அடைந்தனர்.
காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல்கள் நடத்தி வருகின்றது. இந்திய ராணுவமும் அதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு தரப்பிலும் வீரர்கள் மரணம் அடைவது தொடர்ந்து வருகிறது.
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அக்னூர் பகுதியில் இன்று காலை பாகிஸ்தான் ராணுவம் திடீரென அத்துமீறி தாக்குதல் நடத்தியது. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் நடந்த இந்த தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.
இருதரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர்கள் இருவர் மரணம் அடைந்துள்ளனர். பாகிஸ்தான் தரப்பில் எந்த உயிர்சேதமும் இல்லை என கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]