
சென்னை: ஐதராபாத் அணிக்கெதிரான தனது முதல் லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 187 ரன்களை சேர்த்துள்ளது.
அந்த அணியின் நிதிஷ் ரானா 56 பந்துகளில் 80 ரன்களை விளாசினார். ராகுல் திரிபாதி 29 பந்துகளில் 53 ரன்களை அடித்தார். முன்னாள் கேப்டன் தினேஷ் கார்த்திக், 9 பந்துகளில் 22 ரன்களை அடிக்க, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை எடுத்தது ஐதராபாத் அணி. கேப்டன் இயன் மோர்கன் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ஐதராபாத் தரப்பில் முகமது நபி மற்றும் ரஷித் கானுக்கு தலா 2 விக்கெட்டுகள் கிடைத்தன. நடராஜன் 4 ஓவர்கள் வீசி, 37 ரன்களைக் கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றினார். ரஷித் கானின் பந்துவீச்சு சிறப்பானதாக அமைந்தது.
[youtube-feed feed=1]