சூரத்:

குஜராத்தில் ஆதார் விபரங்களை சட்ட விரோதமாக பயன்படுத்தி ரேசன் பொருட்களை திருடிய 2 ரேசன் கடை உரிமையாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அன்னப்பூர்னா யோஜனா என்ற திட்டம் மூலம் ரேசன் கடைகள் பண்டின் தீனதயாள் கிராகக் பந்தர் என்ற பெயரில் 2016ம் ஆண்டு ஏப்ரலில் தொடங்கப்பட்டது.

இதற்காக அரசின் ரேசன் கடைகளை நடத்தி வரும் உரிமையாளர்களுக்கு பிரத்யேக யூஸர் ஐடி, பாஸ்வேர்டு வழங்கப்பட்டு, மின்னணு பதிவேடுகளை பராமரிப்பு செய்வதற்காக ஆதார் பயோமெட்ரிக் தகவல்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உணவு பொருள் பெறும் மக்கள் தங்களது கை விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் ஆதார் தகவல்கள் கணினியில் சரிபார்க்கப்பட்டு பொருட்கள் வழங்கப்படும். இதற்கு ரசீது வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஒரு ரேசன் கடையில் கணினி மென்பொருளை முட க்கியும், ஆதார் தகவல்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியும் மானிய உணவு பொருட்களை திருடி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து பயனாளிகள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். கலெக்டர் உத்தரவின் பேரில் சம்ம ந்தப்பட்ட ரேசன் கடை உரிமையாளர்கள் பாபுபாய் போரிவால் (வயது 53), சம்பத்லால் ஷா (வயது 61) ஆகிய இருவரும கைது செய்யப்பட்டு 5 நாட்கள போலீஸ் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் தவே தெரிவித்துள்ளார்.